தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு

தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த சலுகையும் இருக்காது.
தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு
Published on

புதுடெல்லி,

பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக, சில ரெயில்களை தனியார்வசம் ஒப்படைக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (ஐ.ஆர்.சி.டி.சி.) 2 ரெயில்களை சோதனை அடிப்படையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. ஆமதாபாத்-மும்பை தேஜஸ் எக்ஸ்பிரஸ், டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆகியவையே அந்த ரெயில்கள். 3 ஆண்டுகளுக்கு இந்த ரெயில்களை ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும்.

இந்த ரெயில்களில், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கக்கூடிய சிறப்பு கட்டணம் அமல்படுத்தப்படும். கட்டண விவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்யும். இதில், எவ்வித சலுகைகளோ, பாஸ்களோ இருக்காது. ரெயில்வே ஊழியர்கள், ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை நடத்த மாட்டார்கள்.

இருப்பினும், ரெயில்வேயின் என்ஜின் டிரைவர்கள், கார்டுகள், நிலைய மேலாளர்கள் ஆகியோர்தான் இவற்றிலும் பணிபுரிவார்கள். இந்த ரெயில்களின் சேவை, சதாப்தி ரெயில்களுக்கு இணையாக இருக்கும் என்று ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com