உத்தரகாண்டில் மழை எச்சரிக்கை; அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை

உத்தரகாண்டில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை நடத்தியுள்ளார்.
உத்தரகாண்டில் மழை எச்சரிக்கை; அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஆலோசனை
Published on

டேராடூன்,

உத்தரகாண்டில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, கடந்த 17ந்தேதி முதல் (நேற்று) வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.

உத்தரகாண்டில் லேண்ஸ்டவுனே பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நடப்பு சூழல் பற்றி பாவ்ரி மற்றும் ருத்ரபிரயாக் மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளிடம் முதல்-மந்திரி புஷ்கார் சிங் தமி இன்று ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com