அரசு பஸ்சுக்குள் மழை நீர் கசிந்தது

அரசு பஸ்சுக்குள் மழை நீர் கசிந்தது
அரசு பஸ்சுக்குள் மழை நீர் கசிந்தது
Published on

தார்வார்:தார்வார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தார்வாரில் இருந்து நாகலவி கிராமத்தை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் குறைவான பயணிகளே இருந்தனர். அப்போது பலத்த மழை கொட்டியதால் பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகியது.

ஜன்னல் ஓரம் தண்ணீர் கொட்டியது. அப்போது பஸ்சில் இருந்த முதியவர் ஒருவர் தான் வைத்திருந்த குடையை விரித்தார். அவர் குடை பிடித்தப்படியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். இதனை ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com