இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இலவச கொரோனா தடுப்பூசி கோரி மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிதான் வலுவான பாதுகாப்பு கவசமாக உள்ளது. நீங்கள் அனைவரும் இலவச கொரோனா தடுப்பூசிக்காக குரல் எழுப்பி மத்திய அரசை எழுப்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக நாம் உள்ளோம். இருந்தாலும் 3.4 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தில் ஏற்படுள்ள இந்த குழப்பத்திற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com