ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்; ராஜ் தாக்கரே

ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என தொண்டாகளுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.
ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும்; ராஜ் தாக்கரே
Published on

மும்பை,

ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என தொண்டாகளுக்கு ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தாதரில் நடந்த குடிபட்வா பொதுக்கூட்டத்தில் மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் என்றார். அவர் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படாத மசூதிகள் அருகில் நவநிர்மாண் சேனாவினர் அனுமன் பஜனை பாடுவார்கள் என எச்சரித்து இருந்தார்.

மேலும் ஒலிபெருக்கி விவகாரம் மத பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை எனவும் கூறியிருந்தார். இதேபோல ஒலிப்பெருக்கியால் முஸ்லிம்கள் உள்பட பல பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதாகவும் நவநிர்மாண் சேனா கூறியிருந்தது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே டுவிட்டரில் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நவநிர்மாண் சேனா ஒலிப்பெருக்கி விவகாரத்தை கையில் எடுத்த பிறகு அது தேசிய பிரச்சினையாகி உள்ளது. நாம் ஒலிப்பெருக்கி பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். அதற்காக நீங்கள் எனது இந்த கடிதத்தை உங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய செய்ய வேண்டும். நமது கோரிக்கைக்கு மக்களிடம் இருந்து பெரிய அளவிலான ஆதரவு தேவைப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com