ராஜஸ்தான்: மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

உணவு சாப்பிட்ட 2 மணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
ராஜஸ்தான்:  மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
Published on

கோட்டா

ராஜஸ்தானில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள கோட்டா மாவட்டத்தில் ரான்பூர் பகுதியில் உள்ள புண்ணிய தேவரியா பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் 27 பேர் மதிய உணவு சாப்பிட்டபோது, அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கல்வி மந்திரி

அரசு பள்ளியில் அளித்த மதிய உணவில் பூசணிக்காய் கூட்டு சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 27 மாணவ மாணவிகளில் 14 பேர் புது மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். உணவு சாப்பிட்ட 2 மணிநேரத்தில் அவர்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

கல்வி மந்திரி மதல் திலாவர், புது மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேற்று மாலை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்து உள்ளார்.

இதுபற்றி விசாரிக்க மருத்துவ குழு ஒன்றும் அந்த பகுதிக்கு சென்றுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே என்ன நடந்தது என்ற விவரங்கள் பற்றி தெரிய வரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com