ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது

வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது
Published on

ஜெய்ப்பூர்,

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஆளும் காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா என கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது அந்த கட்சி வழங்கியிருக்கும் 7 வாக்குறுதிகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

இதேபோன்று, பா.ஜ.க. சார்பில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களில் ஒன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 6 மணி வரை நடக்கிறது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com