அமைச்சரவை விரிவாக்கம்: ராஜஸ்தானில் 22 பேர் மந்திரிகளாக பதவியேற்பு

புதிய மந்திரிகளுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ராஜ்பவனில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சரவை விரிவாக்கம்: ராஜஸ்தானில் 22 பேர் மந்திரிகளாக பதவியேற்பு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25-ந்தேதி தேர்தல் நடந்தது. டிசம்பர் 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி 115 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 69 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றிருந்தது.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா கடந்த 15-ந்தேதி பதவியேற்றார். மேலும் துணை முதல்-மந்திரிகளாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர் கிரோடிலால் மீனா உள்பட 22 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் 12 பேர் கேபினட் மந்திரிகள் ஆவார்கள்.

புதிய மந்திரிகள் பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடந்தது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேற்று பதவியேற்றவர்களில் 17 பேர் புதுமுகங்கள் ஆவார்கள்.

ராஜஸ்தானில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்துக்கு பிறகு மந்திரிசபை அமைக்கப்பட்டு 22 பேர் நேற்று பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com