ராஜஸ்தான்: லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராஜஸ்தான்: லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் மஹிபால் சிங் (55), அவரது மனைவி கீதா தேவி (50) மற்றும் அவர்களது மகன் லலித் (30). இவர்கள் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று கார் மும்பை-டெல்லி செல்லும் நெடுஞ்சாலை தவுசாவில் உள்ள பந்தரேஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கார் ஒரு லாரி மீது மோதி பின்னர் எதிர்பாராதவிதமாக சாலை பிரிப்பானில் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் லலித்தின் மனைவி பூஜா மட்டும் காயங்களுடன் உயிர்த்தப்பினார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்தில் காயமடைந்த பூஜாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com