ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு

ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி - முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு
Published on

ராஜஸ்தான்,

கொரோனா வைரஸ் என்ற கொலைகார வைரசின் கோரப்பிடியில் சிக்கி நாடு தத்தளித்து கொண்டிருக்கிறது. மராட்டியம், கேரளா, டெல்லி, கர்நாடகம், சத்தீஷ்கார் என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக் கானோர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனா நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்மே 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அத்துடன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேரடியாக தடுப்பூசி வாங்கிக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்த மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் இன்று மேலும் 15,809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 82,77,809 ஆக உள்ளது. மாநிலத்தில் தற்போது வரை கொரோனா தொற்றுக்கு 1,36,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com