ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு; சட்டசபையை கூட்டக் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினார்

ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் சட்டசபையை கூட்டக் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.
ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு; சட்டசபையை கூட்டக் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினார்
Published on

புதுடெல்லி

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை வரும் 24-ம் தேதி வரை ஒத்திவைக்கக் கோரி ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார்.

அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கலந்துகெள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநிலத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களைத் தகுதிநீக்கம் செய்வது தெடர்பாக மாநில சட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீசும் அனுப்பினார்.

இந்த நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் கடந்தவாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

அசோக் கெலாட் அரசின் சட்டசபையை கூட்டும் முதல் திட்டத்தை நிராகரித்த கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா,

சில எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான பிரச்சினை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் நிலுவையில் உள்ளது. இந்த விஷயத்தை அறிந்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

கெலாட் ஆளுநருக்கு இரண்டாவது திட்டத்தை அனுப்பினார், கொரோனா வைரஸை நிகழ்ச்சி நிரலாகக் குறிப்பிட்டு, ஜூலை 31 தேதி சட்டசபையை கூட்ட வேண்டும் என கூறி உள்ளார். ஆனால் அதில் பெரும்பான்மையை நிரூபிப்பதுகுறித்த எந்த வார்த்தையும் இல்லை.

இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டசபையை கூட்டக் கோரி முதல்வர் அனுப்பிய கேப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com