

ஜெய்பூர்,
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 2021-ஐ வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாப்டு கொண்டாட்டங்களின் போது பொது மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதால், அதனை தவிர்க்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தை கொண்டாட பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.