ராஜஸ்தான்: ஜெய்ஸ்ரீராம் என கூறுமாறு முஸ்லீம் நபரை தாக்கிய நபர் பிடிபட்டார்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூறுமாறு முஸ்லீம் நபரை தாக்கிய இளைஞரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தான்: ஜெய்ஸ்ரீராம் என கூறுமாறு முஸ்லீம் நபரை தாக்கிய நபர் பிடிபட்டார்
Published on

சிரோகி,

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில், பதின்ம வயது இளைஞர் ஒருவர், 45 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் நபரை, ஜெய்ஸ்ரீராம் எனக்கூறுமாறு வற்புறுத்தி சரமாரியாக தாக்கும் காட்சிகள் அண்மையில் வீடியோவாக வெளியானது. மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஜெய்ஸ்ரீராம் என கூறும் படி ஏறக்குறைய 25 முறை தாக்கும் காட்சிகள் அடங்கியுள்ளன.

இந்த விடீயோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் கடும் அதிர்வலைகள் எழுந்தன. மேலும், இந்த சம்பவம் குறித்து அபு ரோடு சிட்டி போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் சமூகத்தினர் புகார் அளித்தனர்

ராஜஸ்தான் போலீசாருக்கு கடும் நெருக்கடியை இந்த சம்பவம் ஏற்படுத்தியதையடுத்து விரைந்து செயல்பட்டு விசாரணையை துவங்கினர். இதில், முஸ்லீம் நபரை தாக்கும் இளைஞர் வினய் மீனா(18) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மீனா என்பவரை கைது செய்துள்ள போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com