ராஜஸ்தானில் மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று மேலும் 1,145 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,555 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 13 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,051 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 12,785 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com