ராஜஸ்தானில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம்

ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மே மாதத்தில் 62.4 மிமீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் பொதுவாக மே மாதத்தில் சராசரியாக 13.6 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த முறை வடமேற்கு இந்தியாவில் பெய்த பருவமழை அல்லாத மழைப்பொழிவு மற்றும் பிற காரணங்களால், 62.4 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 1917-ம் ஆண்டு மே மாதத்தில் 71.9 மிமீ மழை பதிவானது. அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தற்போது கடந்த மே மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.

இன்று பிகானேர், ஜோத்பூர், அஜ்மீர், ஜெய்ப்பூர் மற்றும் பரத்பூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் ஜூன் 5,6 வரை மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் இருந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com