ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
Image Courtesy : ANI 
Image Courtesy : ANI 
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 115 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா பதவியேற்றார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி அழைப்பு விடுத்திருந்தார்.

ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, மந்திரிசபை உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பஜன்லால் சர்மா, கூட்டத்தொடரின்போது அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்கள் கருத்தை முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com