ராஜஸ்தான்: பி.எஸ்.எப். வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மத்திய சட்ட மந்திரி

அவர் குத்து விளக்கேற்றியதும், வீரர், வீராங்கனைகளும் வரிசையாக தீபமேற்றினர். அதனுடன், அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டன.
தீபாவளி
Published on: 

பிகானர்

ராஜஸ்தானில் மத்திய சட்ட மந்திரி மேக்வால், பி.எஸ்.எப். வீரர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் பகுதிக்கு வருகை தந்த மத்திய சட்ட துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை இன்று கொண்டாடினார்.

அப்போது, வண்ண கோலங்கள் வரையப்பட்டு இருந்தன. அவர் குத்து விளக்கேற்றியதும், வீரர்களும் வரிசையாக தீபமேற்றினர். அதனுடன், அகல் விளக்குகளும் ஏற்றப்பட்டன. வீரர், வீராங்கனைகள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஒரு பெரிய குடும்பம்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி மேக்வால், நம்முடைய வீரர்களுடன் ஒன்றாக இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது. அவர்கள் நம்முடைய குடும்பத்தினர் ஆவர்.

அன்புக்குரியவர்களிடம் இருந்து வெகுதொலைவில் அவர்கள் இருந்தபோதும், ஒன்றாக இணைந்து பண்டிகையை கொண்டாடுவது ஒரு பெரிய குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்து கொண்டார்.

X