ராஜஸ்தான்: பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் கொடிகள் விற்பனையால் பரபரப்பு


ராஜஸ்தான்: பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் கொடிகள் விற்பனையால் பரபரப்பு
x

பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் கொடிகள் இருந்ததுடன், உருது மொழியில் ஜாஷன்-இ-ஆசாதி பாகிஸ்தான்-14 ஆகஸ்டு என எழுதப்பட்டு இருந்தது.

இந்தூர்,

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உன்ஹெல் நாகேஷ்வர் நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் சிறுவர்கள் சிலர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கி இருக்கின்றனர். அவற்றுடன் பலூன்களும் சேர்த்து வழங்கப்பட்டு உள்ளன.

அவற்றை சிறுவர்களின் பெற்றோரில் சிலர் வாங்கி பார்த்தபோது, பலூனில் பாகிஸ்தான் நாட்டின் கொடிகள் பொறிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பலூன்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை விற்பனை செய்த கடைக்கு சென்று விசாரணை செய்தனர். இதில், கடைக்காரர்களான நீரஜ் சிங்கால் மற்றும் தீரஜ் சிங்கால் ஆகிய இருவரிடமும் விசாரித்தபோது, மராட்டியம், டெல்லி மற்றும் பிற இடங்களில் இருந்து அவற்றை வாங்கினோம் என அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.

பலூன் குவியலையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றினர். இதுபற்றி சென்டிரல் கொத்வாலி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ரவீந்திரா பராஷர் கூறும்போது, பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, அவற்றுடன் பாகிஸ்தான் கொடிகள் இருந்ததுடன், உருது மொழியில் ஜாஷன்-இ-ஆசாதி பாகிஸ்தான்-14 ஆகஸ்டு என எழுதப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

1 More update

Next Story