

சென்னை,
அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட பின்னர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். வீட்டு அருகில் வைத்து நிருபர்கள் அவரது காரை முற்றுகையிட்டு அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியலாக இருக்கும்.விரைவில் மக்களை சந்தித்து பேச உள்ளேன். அப்போது எனது அரசியல் கொள்கைகள் குறித்து விளக்கி கூறுவேன். எனது அரசியல் பயணம் தெளிவானதாக இருக்கும். எனது அரசியல் பிர வேசத்தை வரவேற்று வாழ்த்து கூறிய கமலுக்கும் மற்றவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.