எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் - பிரசாந்த் பூஷண்

எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் உடனடியாக வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் என பிரஷாந்த் பூஷண் கூறி உள்ளார்.
எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் - பிரசாந்த் பூஷண்
Published on

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை டுவிட்டரில் விமர்சித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது. இதில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் கருத்துக்கு மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியது.

ஆனால், அதற்கு பிரசாந்த் பூஷண் மறுத்துவிட்ட நிலையில், தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

ஒரு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒரு ரூபாய் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கையில் ஒரு ரூபாயுடன் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு வந்தவுடன் என்னுடைய வழக்கறிஞரும் மூத்த சக பணியாளருமான ராஜீவ் தவான் உடனடியாக ஒரு ரூபாய் வழங்கினார் அதனை நன்றியுடன் ஏற்று கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com