

புதுடெல்லி,
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா இருந்து வரும் நிலையில், தேர்தல் கமிஷனர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் அசோக் லவாசா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக பணியாற்ற இருப்பதால் அவர் பதவி விலகினார். அவர் வருகிற 31-ந் தேதியுடன் தேர்தல் கமிஷன் பணியில் இருந்து வெளியேறுகிறார்.
இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் குமாரை புதிய தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி நேற்று நியமித்துள்ளார். ஜார்கண்ட் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார், நிதியமைச்சக முன்னாள் செயலாளர் ஆவார்.