கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார். முப்படை தலைமை தளபதி பிபின் ரவத், முப்படை தளபதிகள் ஆகியோருடன் அவர் விவாதித்தார்.