2-வது ஆண்டு நினைவு தினம்: லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி

2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
2-வது ஆண்டு நினைவு தினம்: லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி
Published on

புதுடெல்லி,

லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி சீன ராணுவம் அத்துமீற முயன்றது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த மோதல் நடந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கல்வான் ஹீரோக்களுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், '2020-ம் ஆண்டு ஜூன் 15-16 தேதிகளில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்காக வீரத்துடன் போராடி தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கல்வானின் மாவீரர்களை நினைவு கூருவோம். அவர்களின் தைரியம், வீரம் மற்றும் உயர்ந்த தியாகம் என்றும் மறக்க முடியாதது. அந்த வீரநெஞ்சங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com