பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை

இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
Published on

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7-ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. சனிக்கிழமை மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலும் அமைதியாக இருந்தது.

இதற்கிடையே சண்டை நிறுத்தத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்டபடி, இன்று இருநாட்டு ராணுவ டிஜிஎம்ஓக்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.சற்று நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் முப்படைகளின் தளபதி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com