மாநிலங்களவை தேர்தல்: பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி...!

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
Image Courtesy: PTI (File Photo)
Image Courtesy: PTI (File Photo)
Published on

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் 57 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு 10-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஆந்திரா, மத்தியபிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கார், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 11 மாநிலங்களில் 41 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

மீதமுள்ள கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதில் 16 இடங்களில் பாஜக 8 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றிபெற்றது. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள சிவசேனா , தேசியவாத காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் வெற்றிபெற்றன. அரியானாவில் பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றிபெற்றார்.

மாநில வாரியாக விவரம்:-

மராட்டியம்: 6 இடங்கள்

பாஜக - 3 வெற்றி

காங்கிரஸ் (மகா விகாஸ் அகாடி கூட்டணி) - 1 வெற்றி

சிவசேனா (மகா விகாஸ் அகாடி கூட்டணி) - 1 வெற்றி

தேசியவாத காங்கிரஸ் (மகா விகாஸ் அகாடி கூட்டணி) - 1 வெற்றி

ராஜஸ்தான் - 4 இடங்கள்

காங்கிரஸ் - 3 வெற்றி

பாஜக - 1 வெற்றி

கர்நாடகா - 3 இடங்கள்

பாஜக - 3 வெற்றி

காங்கிரஸ் - 1 வெற்றி

அரியானா - 2 இடங்கள்

பாஜக - 1 வெற்றி

சுயேட்சை (பாஜக ஆதரவு பெற்றவர்) - 1 வெற்றி

முன்னதாக 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் பாஜக 14, காங்கிரஸ் 4, தெலுங்கானா ராஷிடிரிய சமிதி 2, பிஜூ ஜனதா தளம் 3, யுவஜனா ஷர்மிகா ரிது காங்கிரஸ் 4, ஜார்க்கண்ட் முக்தி போட்சா 1, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, ஆம் ஆத்மி 2, திமுக 3, அதிமுக 2, சமாஜ்வாதி 1, ராஷ்டிரிய லோக் தல் 1 மற்றும் ஒரு சுயேட்சை எம்.பி. (கபில் சிபில்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com