மாநிலங்களவை தேர்தல்: மத்திய பிரதேசத்தில் 3 இடங்களையும் போட்டியின்றி கைப்பற்றியது பாஜக

பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மாநிலங்களவை தேர்தல்:  மத்திய பிரதேசத்தில் 3 இடங்களையும் போட்டியின்றி கைப்பற்றியது பாஜக
Published on

இந்தியாவில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 இடங்களுக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஐதராபாத் கோர்ட்டில் அவர் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்கு பற்றி குறிப்பிடப்படாததால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற செய்வதற்காக மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனை தொடர்ந்து மீனாட்சி நடராஜன் தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார். இந்நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மீனாட்சி நடராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை அவசர வழக்காக விசாரிக்க மீனாட்சி நடரா ஜன் கோரி உள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்க ஒப்புக்கொண்டது.

இதற்கிடையே, பாஜகவின் வேட்பாளர்கள் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வானதாக, தேர்தல் அலுவலர் அரவிந்த் சர்மா இன்று ( அறிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர்கள் 3 பேரும் மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com