மாநிலங்களவை எம்பி-யாக பி.டி. உஷா பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நியமன உறுப்பினர் பிடி உஷா ராஜ்யசபாவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
மாநிலங்களவை எம்பி-யாக பி.டி. உஷா பதவிப் பிரமாணம்
Published on

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா உள்ளிட்டோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தடகள வீராங்கனை பி.டி. உஷா ராஜ்யசபாவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com