ரூ.72 ஆயிரம் வழங்குவது ராகுலின் நேர்த்தியான யுக்தி - சத்ருகன் சின்ஹா சொல்கிறார்

ரூ.72 ஆயிரம் வழங்குவது ராகுலின் நேர்த்தியான யுக்தி என சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.
ரூ.72 ஆயிரம் வழங்குவது ராகுலின் நேர்த்தியான யுக்தி - சத்ருகன் சின்ஹா சொல்கிறார்
Published on

பாட்னா,

முன்னாள் நடிகரும், பீகார் மாநிலம் பாட்னா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா, கட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் தொடர்ந்து பா.ஜ.க. தலைமையிலான அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சூழ்நிலைகளின் நாயகன் என்றும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் அவரின் திட்டத்தை நேர்த்தியான யுக்தி என்றும் பாராட்டியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தியின் இந்த திட்டத்தை குறைகூறும் பா.ஜ.க. தலைவர்கள் கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவது மற்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன் என்றும் கடுமையாக சாடினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com