

ஸ்ரீநகர்,
இந்தியாவில் இன்று ரக்ஷா பந்தன் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அவர்களது சகோதரிகள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடினர்.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடினர். அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லையிலும் பெண்கள் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி இனிப்புகளை வழங்கினர்.