ரக்‌ஷாபந்தன்: உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்!

ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு வரை பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
ரக்‌ஷாபந்தன்: உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்!
Published on

லக்னோ,

உத்தரப் பிரதேச அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 28-ல் வரவிருக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பரிசாகக் கருதப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் பண்டிகை

கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி.யில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணத்தைத் தொடங்கினார்.

இலவச பயணம்

இது குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனபடி ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு வரை பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com