புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்: கும்பமேளாவில் சாதுக்களுக்கு ராம்தேவ் அறிவுரை

புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என சாதுக்களை ராம்தேவ் கேட்டுக்கொண்டார்.
புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்: கும்பமேளாவில் சாதுக்களுக்கு ராம்தேவ் அறிவுரை
Published on

பிரக்யாராஜ்,

கும்பமேளாவில் பங்கேற்றுள்ள சாதுக்கள் புகை பழக்கத்தை கைவிட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1 கோடியே 40 லட்சம் பேர் அங்கு குவிந்து, புனித நீராடினர். ஒவ்வொரு நாளிலும் லட்சக்கணக்கானோர் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். 55 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளா நிகழ்ச்சி மார்ச் 4 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில், கும்பமேளாவில் உள்ள சாதுக்களிடம் உரையாடிய பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், ராமர் மற்றும் கிருஷ்ணனை நாம் பின்பற்றுகிறோம். தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர்கள் புகைத்தது இல்லை. பிறகு ஏன் நாம் புகைக்க வேண்டும்.

புகைக்கும் பழக்கத்தை கைவிட நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். வீடு, தாய், தந்தை, உள்ளிட்ட அனைத்தையும் துறந்து விட்டு வர முடியும் நம்மால், ஏன் புகை பழக்கத்தை துறக்க முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com