அயோத்தி கோவில் கருவறையில் வில் ஏந்திய ராமர் சிலை - ராமஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

அயோத்தி கோவில் கருவறையில் வில் ஏந்திய ராமர் சிலை அமைக்கப்பட உள்ளதாக ராமஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினரான சுவாமி தீர்த்த பிரசன்யாச்சாரியா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முடிவடைந்த அறக்கட்டளையின் 2 நாள் கூட்டத்தில், கோவில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலை குறித்த விவரங்கள் முடிவு செய்யப்பட்டன. அதையடுத்து அறக்கட்டளை உறுப்பினர் தீர்த்த பிரசன்யாச்சாரியா, ராமர் சிலை பற்றிய தகவல்களை நேற்று வெளியிட்டார்.

'புதிய ராமர் சிலை, 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில், வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் இருக்கும். கர்நாடகத்தில் இருந்து தருவிக்கப்படும் 'கிருஷ்ண சிலா' எனப்படும் அபூர்வ வகை கருங்கல்லில், மைசூருவைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிப்பார்' என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com