ராம ராஜ்ஜியம் வருகிறது: இந்தியாவின் சுய மரியாதை திரும்பி இருக்கிறது - மோகன் பகவத்

ராமர் கோவில் நிகழ்ச்சி ஒரு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ராம ராஜ்ஜியம் வருகிறது: இந்தியாவின் சுய மரியாதை திரும்பி இருக்கிறது - மோகன் பகவத்
Published on

அயோத்தி,

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறுகையில், 'ராமர் கோவிலுக்காக பிரதமர் மோடி மட்டும் தவம் செய்தார். இப்போது, நாம் அனைவரும் அதைச் செய்ய வேண்டும். இந்த நிகழ்வு மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது' என்று கூறினார்.

மேலும் அவர், 'இன்றைய நிகழ்ச்சி ஒரு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. அது துயரில் இருந்து முழு உலகத்திற்கும் நிவாரணம் அளிக்கும்' என்றும் தெரிவித்தார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மூலம் நாட்டில் ராம ராஜ்ஜியம் வருவதாக கூறிய மோகன் பகவத், அனைவரும் சர்ச்சைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com