

அயோத்தி,
அயேத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மேடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெற இருப்பதால் அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் ராமர்கோயில் பூமி பூஜை விழா நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று அயோத்தி நகர் உட்பட மாநிலம் முழுதும் உள்ள மக்கள் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றினர். விலக்குகளில் இருந்து வெளிப்பட்ட தீப ஒளியில் அயோத்தி நகரம் முழுவதும் ஜொலித்தது. மேலும் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் தனது அலுவலக இல்லத்தில் தீப ஒளி ஏற்றினார். பின்னர் மத்தாபூ கொளுத்தியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தார்.