

ரிஷிகேஷில் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ்ராவத்,
பா.ஜனதாவினர் எப்போதுமே நியாயம் அற்றவர்கள். நெறிமுறைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்காதவர்கள், அவர்கள் ராமர் பக்தர்களாக இருக்க முடியாது. நாங்கள் தான் அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். நாங்களே அடுத்தவர் மாண்பினை மதிப்பவர்கள். எனவே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தான் ராமர் கோயில் கட்டப்படும். கண்டிப்பாக கட்டப்படும், என்றார். கர்நாடகாவில் பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.