

ஹாஜிபூர்
இப்பேரணி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் குடும்பம் மற்றும் அவரது கறுப்புப் பணத்தை பாதுகாக்கும் நோக்கோடு நடத்தப்பட்டது என்றும், பேரணிக்கு பயன்பட்ட கறுப்புப் பணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பேரணியின் நோக்கமே கறுப்பை வெள்ளையாக்குவதே என்ற பஸ்வான், இதில் பங்கேற்றதன் மூலம் சில தலைவர்கள் தங்களின் பெயருக்கு பங்கம் தேடிக்கொண்டுள்ளனர் என்றார். மேலும் ராஜத தலைவர்கள் போலி புகைப்படங்களை வெளியிட்டு பேரணி வெற்றி என்று கூறி வருகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
லாலு கட்சி மாநிலத்தின் 20 மாவட்டங்களில் 1.5 கோடி பேருக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி இருக்கும்போது பேரணி நடத்தியுள்ளது என்றும் பஸ்வான் சாடினார்.