சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்: பாபா ராம்தேவ் வேண்டுகோள்

சீன பொருட்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்: பாபா ராம்தேவ் வேண்டுகோள்
Published on

புதுடெல்லி,

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இதனால் இந்தியா -சீனா இடையேயான எல்லையில் பதட்டம் நீடிக்கிறது.

இந்த நிலையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பாபா ராம்தேவ் கூறியிருப்பதாவது: - சீனா பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறது.பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க வேண்டும். இரண்டாவதாக ஒவ்வொரு இந்தியரும் சீன உற்பத்தி பொருட்களை புறக்கணிக்க வேண்டும். செல்போன், கார்கள், வாட்ச், பொம்மைகள் ஆகிய அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் எதிர்ப்புகளை கடந்து இந்த விவகாரத்தில் ஒரணியில் திரள வேண்டும். இந்தியா, சீனா இடையேயான பதட்டம் அதிகரித்து உள்ள நிலையில், நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்களும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும். பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com