அலோபதி மருத்துவம் குறித்த கருத்தைத் திரும்பப் பெற்றது ராம்தேவின் முதிர்ச்சி: ஹர்ஷவர்தன்

அலோபதி மருத்துவம் குறித்த தனது கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ராம்தேவ் கூறியிருந்தார்.
அலோபதி மருத்துவம் குறித்த கருத்தைத் திரும்பப் பெற்றது ராம்தேவின் முதிர்ச்சி: ஹர்ஷவர்தன்
Published on

புதுடெல்லி,

யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி (ஆங்கில) மருத்துவம் குறித்து கடும் விமர்சனங்களைத் தெரிவித்து இருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை 'முட்டாள் மருத்துவம்' எனக் கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து அவர் பேசிய வீடியோவில், ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார்.

ராம்தேவின் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ராம்தேவுக்கு கருத்தைத் திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த ராம்தேவ், யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அலோபதி மருத்துவம் குறித்த கருத்தைத் திரும்பப் பெற்ற ராம்தேவின் செயல், அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். ஹர்ஷவர்தன் இது தொடர்பாக தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- அலோபதி மருத்துவம் குறித்த கருத்தைத் திரும்பப் பெற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம்தேவின் செயல் பாராட்டத்தக்கது. ராம்தேவின் செயல் அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்றை இந்திய மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை நாம் உலகுக்குக் காட்ட வேண்டியுள்ளது. நிச்சயமாக நமது வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று எனப்பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com