பள்ளிக்கல்வி செயல்பாட்டுக்கான தரவரிசை: 3-வது நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி

2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீடு நேற்று வெளியிடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை 2020-2021-ம் கல்வி ஆண்டுக்கான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாட்டு தரவரிசை குறியீட்டை நேற்று வெளியிட்டது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 வரிசைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,000 புள்ளிகளில் 950-க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நிலை 1 என்ற உயரிய மதிப்பைப் பெற்றுள்ளன.

இந்த செயல்பாட்டு வரிசை குறியீட்டின்படி தமிழகம், புதுச்சேரி ஆகியவை முறையே 855 மற்றும் 897 புள்ளிகளோடு 3-வது நிலையில் உள்ளன. கற்றல் வெளிப்பாடுகள் பிரிவில் 132 புள்ளிகளையும், அணுகல் பிரிவில் 78 புள்ளிகளையும், உள்கட்டமைப்பு வசதிகளில் 131 புள்ளிகளையும், சமத்துவம் பிரிவில் 183 புள்ளிகளையும், ஆளுகை நடைமுறை பிரிவில் அதிகபட்சமாக 331 புள்ளிகளையும் தமிழகம் பெற்றுள்ளது.

புதுச்சேரிக்கு கற்றல் வெளிப்பாடுகளில் 124 புள்ளிகளும், அணுகலில் 76 புள்ளிகளும், உள்கட்டமைப்பு வசதிகளில் 134 புள்ளிகளும், சமத்துவப் பிரிவில் 220 புள்ளிகளும், ஆளுகை நடைமுறையில் 343 புள்ளிகளும் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com