அரசியல் நோக்கம் கொண்டு என் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது : அருணாசலப்பிரதேச முதல்வர் பேச்சு

அரசியல் நோக்கம் கொண்டு என் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என அருணாசலப்பிரதேச முதல்வர் பீம காந்து கூறியுள்ளார்.
அரசியல் நோக்கம் கொண்டு என் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது : அருணாசலப்பிரதேச முதல்வர் பேச்சு
Published on

அருணாசலப்பிரதேச முதல்வர் பீம காந்து தன்னை 2008 ஆம் ஆண்டு கற்பழித்தாக சென்ற வாரம் 15 ஆம் தேதி பெண்கள் தேசிய ஆணையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அன்றைய தினம் (பிப் 15) பிரதமர் மோடி அருணாசலப்பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முதல்வர் கூறுகையில், இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். அரசியல் நோக்கங்கொண்டே இந்த மாதிரியான ஒரு புகார் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான உண்மையை சரியான முறையில் பெண்கள் தேசிய ஆணையம் தீர்மானிக்கும் என நம்புகிறேன் எனக் கூறினார்.

மேலும் முதல்வர் கூறுகையில், எனக்கு எதிரான இந்த பொய்யான குற்றச்சாட்டினால் நான் மிகவும் அதிர்ச்சியுற்று வருந்தினேன். நான் எப்பொழுதும் மற்றவர்களிடத்தில் மிகவும் மரியாதையுடனும், நேர்மையுடனும் இருந்து வருகிறேன். என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கத்தோடு எதிரிகளால் வடிவமைக்கப்படுகிறது. அருணாசலப்பிரதேசத்தின் அரசியல் வாழ்வில் அவமானம் மற்றும் அழுக்கு தந்திரங்களை எதிரிகள் கையில் எடுத்துள்ளனர் என்பது துரதிஷ்டமான ஒன்று. எனக்கு அதிகாரத்தில் நம்பிக்கை உள்ளது. இந்த மோசமான குற்றச்சாட்டிலிருந்து நான் வெற்றி அடைவேன் என்பதில் சந்தேகமில்லை எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com