பாலியல் பலாத்கார குற்றவாளி குர்மீத் ராம் ரகீமுக்கு சிறையில் சலுகை-மந்திரி மறுப்பு

பாலியல் பலாத்கார குற்றவாளி குர்மீத் ராம் ரகீமுக்கு சிறையில் சலுகை அளிக்கபடுவதாக வந்த புகாருக்கு சிறைத்துறை மந்திரி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
பாலியல் பலாத்கார குற்றவாளி குர்மீத் ராம் ரகீமுக்கு சிறையில் சலுகை-மந்திரி மறுப்பு
Published on

சீக்கிய மதத்தின் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீமுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அவர் ரோதக் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைசாலையில் அவருக்கு ராஜ உபசாரம் நடப்பாதாக அவருடன் ஜெயில் இருந்தவர் கூறி உள்ளார். ஆனால் சிறைத்துறை மந்திரி அதனை மறுத்து உள்ளார்.

குர்மீத் ராம் ரகீம் அடைக்கப்பட்டு இருந்த சிறையில் ராகுல் என்பவர் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் விடுதலை ஆகி உள்ளார். செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

மற்ற கைதிகளை பார்க்க 20 நிமிடம் என்றால் ராம் ரகீமை பார்க்க வருபவர்களுக்கு அவருடன் 2 மணி நேரம் பேச அனுமதிக்கப்படுகிறது. சிறைசாலையில் அவருக்கு எந்த வேலையும் வழங்கப்படுவது இல்லை. அவர் எந்த வேலையும் செய்ததை நான் பார்த்தது இல்லை. அவருக்கு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை என நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

ஆனால் இதனை அரியான சிறித்துறை மந்திரி கிரிஷன் லால் பன்வார் இதனை மறுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-

"அவருக்கு எந்த விஐபி சலுகையும் வழங்கப்படவில்லை மற்றும் வேறு மற்ற கைதி போலவே வாழ்கிறார். ஒவ்வொரு சிறைகைதிகள் ,பிரிவுகளுக்கும் இடையே வெகுதூரம் உள்ளது. அவர்கள் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் தான் அந்த கைதி அவ்வாறு கூறி உள்ளார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com