

அசாமில் கனமழை காரணமாக 11 நாட்களாக வெள்ளத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் 40 சதவிதம் நீரில் மூழ்கியுள்ளது. அங்கு விலங்குகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவ்வகை காண்டாமிருகங்கள் 17 உள்பட 200 விலங்குகள் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளன. மான்கள் மட்டும் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளன.