நடிகை ரஷ்மிகா மந்தனா மீது ரசிகர்கள் அதிருப்தி

காந்தாரா படத்தை பார்க்கவில்லை எனக்கூறி நடிகை ரஷ்மிகா மந்தனா மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நடிகை ரஷ்மிகா மந்தனா மீது ரசிகர்கள் அதிருப்தி
Published on

பெங்களூரு:

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தயாரித்து நடித்து உள்ள படம் காந்தாரா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. காந்தாரா திரைப்படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். குல தெய்வ வழிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ள இந்த படத்தை பிற மொழி நடிகர்களும் வெகுவாக பாராட்டி உள்ளனர். ஆனால் காந்தாரா திரைப்படத்தை நடிகை ரஷ்மிகா மந்தனா இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதாகவும், பெங்களூரு திரும்பியதும் காந்தாரா படத்தை பார்க்க இருப்பதாகவும் கூறி இருந்தார்.

ரஷ்மிகா மந்தனாவின் கருத்துக்கு ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். நாடே கொண்டாடி வரும் காந்தாரா திரைப்படத்தை கர்நாடகத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா இன்னும் பார்க்காமல் இருப்பது சரியில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி தயாரித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரஷ்மிகா மந்தனா திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். இந்த படத்தின் போது ரிஷப் ஷெட்டியும், ரஷ்மிகாவும் காதலித்தனர். அவர்கள் காதல் திருமணம் வரை சென்றது. பின்னர் அவர்கள் 2 பேரும் பிரிந்துவிட்டனர். தனது முன்னாள் காதலரின் படம் என்பதால் காந்தாராவை ரஷ்மிகா இன்னும் பார்க்காமல் உள்ளாரா என்று கேள்வி எழுந்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com