பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீர் உடல்நல குறைவு

பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீர் உடல்நல குறைவு
Published on

பாட்னா,

பீகாரின் பாட்னா நகரில் தனது வீட்டில் இருந்த ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சிலர் அவரது வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதன்பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மருத்துவர் எஸ்.கே. சின்ஹா என்பவர் கூறும்போது, அவருக்கு லேசாக உடல் வலி உள்ளது.

அவருக்கு காய்ச்சலும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தேஜ் பிரதாப் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளார். சுவாச பாதிப்பு எதுவும் அவருக்கு கிடையாது என்று தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com