இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் குறைவு

கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் குறைவு
Published on

புதுடெல்லி

நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்திருந்தது.

பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை தங்களது அன்றாட 100 சோதனைகளுக்கு மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் கடந்த மாதத்தில் இரட்டை இலக்கத்திலிருந்து 5% க்கும் குறைந்துவிட்டன. அரியானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானா ஆகியவையும் குறைத்து வருகின்றன.

கோவா, மராட்டியம், கேரளா, சிக்கிம், சண்டிகார், நாகாலாந்து, சத்தீஸ்கார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 11-19% வரை குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com