மேற்கு வங்காள சபாநாயகராக ரதீந்திர போஸ் நியமனம்

அவருடைய தலைமைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு அளிக்கும்படி நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சபாநாயகராக ரதீந்திர போஸ் நியமனம்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. அதில், ஆச்சரியமளிக்கும் வகையில் 2 கட்ட தேர்தலிலும், 90 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்றது.

இதில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், பா.ஜ.க. 207 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. திரிணாமுல் காங்கிரசுக்கு 80 தொகுதிகளே கிடைத்தன. இதனை தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் 9-வது முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், மேற்கு வங்காள சபாநாயகராக ரதீந்திர போஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரதீந்திர போஸ் அர்ப்பணிப்புடன் செயல்பட கூடிய கட்சி தொண்டர். அவர் எம்.எல்.ஏ., மந்திரி அல்லது சபாநாயகர் என எந்த பதவிக்கும் விண்ணப்பிக்கவில்லை.

அவருடைய அர்ப்பணிப்பை கட்சி அங்கீகரிக்கிறது. பட்டய கணக்காளராக அவர் பணியாற்றி வருகிறார். இந்த பொறுப்பை கையாள கூடிய தேவையான திறன் அவருக்கு உள்ளது. அவருடைய தலைமைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு அளிக்கும்படி நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் சபாநாயகரை போட்டியின்றி தேர்ந்தெடுப்பது என்பது மரபு. இந்த மரபை எதிர்க்கட்சிகள் தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார். இதன்படி, நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com