

கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்-மந் திரியாக பதவியேற்றார்.
புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் தற்காலிக சபாநாயகர் தபஸ்ராய் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் தற்காலிக சபாநாயகர் தபஸ்ராய் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாநிலத்தின் புதிய சபாநாயகர் தேர்தல் நேற்று நடந்தது. முன்னதாக பா.ஜனதாவின் ரதிந்திர போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அவரது பெயரை நேற்று சட்டசபையில் முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி சபாநாயகராக முன்மொழிந்தார். அவரை எதிர்த்து வேறுயாரும் போட்டியிடவில்லை. இதைத்தொடர்ந்து அவையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பா.ஜனதாவின் அனைத்து 207 எம்.எல்.ஏ.க்களும் ரதிந்திரபோசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் அவர் போட்டியின்றி தேர்வானதாக தற்காலிக சபாநாயகர் தபஸ் ராய் அறிவித்தார்.
கூச்பெகர் மாவட்டத்தின் தஸ்கின் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான ரதிந்திரபோஸ், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர் ஆவார்.