ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

கொள்ளேகால் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
Published on

கொள்ளேகால்-

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு உணவுத்துறை அதிகாரிகள், கொள்ளகால் போலீசாருடன் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அவர் அனுரூப் நகரை சேர்ந்த தினஷ் என்பதும், ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்த 311 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர். இதுகுறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com