ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்

ரெயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை என பயணி ஒருவர் கூறியுள்ளார்.
ரெயில் பயணிகளின் உணவை ருசிபார்த்த எலி - வீடியோ வைரல்
Published on

போபால்

ரெயில் நிலையத்தில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் இருக்கும் உணவை எலி சுவைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், இடார்சி ரெயில் நிலையத்தில் இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் இருக்கும் உணவை எலி ஒன்று சுவைக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐஆர்சிடிசி உணவகத்தில் எலி சுவைக்கும் காட்சியை படம்பிடித்த பயணி ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இதனால்தான் ரெயில் நிலையங்களில் உள்ள ஐஆர்சிடிசி உணவகத்தில் நான் உணவு வாங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவ் மற்றும் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தையும் டேக் செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போபால் மண்டல ரெயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ரெயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

ஐஆர்சிடிசி வழங்கும் உணவுகள் குறித்து அடிக்கடி இதுபோன்ற எதிர்மறையான செய்திகள் வருவது ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com