

புதுடெல்லி
மத்திய ரிசர்வ் வங்கி கூறி இருப்பதாவது:-
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம். ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.